மழையில் நனையாமல் நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்!- ஓ பன்னீர்செல்வம்;

திறந்தவெளியில் கலங்களில் உள்ள நெல் மூட்டைகளை  மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும்
 
ricebag

தற்போது நம் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ளது திமுக. மேலும் பத்து ஆண்டுக்கு பின்னர் திமுக ஆளுங்கட்சியாக வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த 10 ஆண்டுகளாக நம் தமிழகத்தில் மிகப்பெரிய வலுவான ஆளும் கட்சியாக இருந்தது அதிமுக.  அதிமுக தற்போது மிக வலிமையான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது என்றே கூறலாம் .இந்நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக வில் எதிர்க்கட்சித் தலைவராக யார் பொறுப்பேற்பார் என்று முன்னதாக கட்சிக்குள்ளேயே குழப்பம் ஏற்பட்டது. அதற்கு முடிவு கட்டமாக முந்தைய எடப்பாடி பழனிசாமி தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.ops

மேலும் அதிமுக கட்சியில் பழனிச்சாமிக்கு இணையாக ஆதரவைப் பெற்றவர் ஓ பன்னீர்செல்வம். மேலும் அவரும் அப்போது அரசை கண்டித்தும் விமர்சித்தும் கேள்விகள் எழுப்பி வருவார்.  தற்போது சில அறிவுறுத்தல்களை கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் திறந்த வெளிகளில் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மத்திய மாநில அரசுகள் காலிகட்டடங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தஞ்சை திருச்சி மாவட்டங்களில் திறந்த வெளியில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன என்றும் மழையில்  நனையாமல் நெல் மூட்டைகளை பாதுகாக்காவிட்டால் அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என்றும் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

From around the web