சொத்து வரியை நாளைக்குள் செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி

 

சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொழில் வரி மற்றும் சொத்து வரியை மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் 30 வரை முதல் கட்டமாக ஒத்திவைக்கப்பட்டது 

அதன்பின்னரும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வந்ததால் செப்டம்பர் 30 வரை சொத்து வரி செலுத்தலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் செப்டம்பர் 30-ம் தற்போது முடிவடைந்தும் பலர் இன்னும் சொத்து வரியை கட்டாமல் இருப்பதை அடுத்து அவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக அக்டோபர் 15 வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது 

அதாவது நாளைக்குள் சொத்து வரியை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தி விட்டால் அவர்களுக்கு அபராதம் ஏதும் இருக்காது என்றும் அதன்பின் செலுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

எனவே சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்தி தனி வட்டியினை தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது

From around the web