உணவு பற்றாக்குறையோடு இரண்டு வார கால ஊரடங்கு நீட்டிப்பா?

கொரோனா கட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு  நீடிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது அரசு
 
lockdown

தற்போது உலகத்தில்  பார்க்க வைக்கும் தகவல் என்று சொன்னால் தற்போது அனைவரும் கூறுவது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி தான். இந்த பொருளாதார வீழ்ச்சி காரணமாக இலங்கையின் உணவுப் பற்றாக்குறையும் கடும் தீவிரமாக நிலையைக் கொண்டு வருகிறது. இதனால் அங்கு உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக  உயர்த்தப்பட்டுள்ளது இது மக்களுக்கு மிகுந்த துன்பத்தை கொடுப்பதாக காணப்படுகிறது.lockdown

மேலும் மற்றும் ஒரு வேதனையான தகவல் என்னவென்றால் அங்கு கொரோனாவின் தாக்கம் தீவிரமாக காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக நாளுக்கு நாள் கொரோனா  ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  இலங்கையில் தினமும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புதிதாக கொரோனா  தொற்று ஏற்பட்டதால் கட்டுப்பாடுகள் அங்கு தீவிரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தனிமைப்படுத்தல், ஊரடங்கு செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை அரசு மேலும் இலங்கையில் புதிதாக 3828 பேருக்கு இந்த கொரோனா  நோய் தொற்று ஏற்பட்டதை அடுத்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 58 ஆயிரத்து 574 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4 லட்சத்து 44 ஆயிரத்து 430 பேர் கொரோனா   நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இதுவரை இலங்கையில் கொரோனா  வைரஸ் தொற்றால் 9400 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், தற்போதைய சூழலில் கொரோனா  குறைக்க ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிப்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது.

From around the web