செப்டம்பர் 30 வரை பயணம் செய்ய தடை: மத்திய அரசு உத்தரவு

 
flight

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதை அடுத்து பல்வேறு போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை விதித்திருந்த மத்திய அரசு தற்போது அதனை மேலும் ஒரு மாதம் நீடித்து செப்டம்பர் 30 வரை சர்வதேச விமானங்கள் இயங்காது என அறிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டுக்கு செல்லும் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் 

இருப்பினும் ஒரு சில சிறப்பு விமானங்கள் சில நாடுகளுக்கு சேவை செய்வதால் அந்த விமானங்களில் சென்று கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு நிலைமை ஓரளவு சீர் அடைந்தால் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web