முறுக்கு வியாபாரியாக மாறிய பேராசிரியர்: கொரோனா கற்று கொடுத்த பாடம்

கொரோனா வைரஸ் காரணமாக பேராசிரியர் வேலையை இழந்த ஒருவர் முறுக்கு வியாபாரம் செய்து அசத்தி வருவது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது நெய்வேலியை சேர்ந்த பேராசிரியர் மகேஸ்வரன் என்பவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். கை நிறைய சம்பளம் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு வேலை பறிபோனது. இதனால் எந்தவித அதிர்ச்சியடையாமல் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற தன்னுடைய தந்தையாரின் மிட்டாய் கடையில் முறுக்கு சுட்டு வியாபாரம் செய்ய
 

முறுக்கு வியாபாரியாக மாறிய பேராசிரியர்: கொரோனா கற்று கொடுத்த பாடம்

கொரோனா வைரஸ் காரணமாக பேராசிரியர் வேலையை இழந்த ஒருவர் முறுக்கு வியாபாரம் செய்து அசத்தி வருவது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

நெய்வேலியை சேர்ந்த பேராசிரியர் மகேஸ்வரன் என்பவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். கை நிறைய சம்பளம் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு வேலை பறிபோனது. இதனால் எந்தவித அதிர்ச்சியடையாமல் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற தன்னுடைய தந்தையாரின் மிட்டாய் கடையில் முறுக்கு சுட்டு வியாபாரம் செய்ய முடிவு செய்தார்

பேராசிரியர் என்று கவுரவம் பார்க்காமல் தனது மனைவியுடன் இணைந்து அவர் முறுக்கு மாவு தயார் செய்து முறுக்கு விற்பனையில் ஈடுபட்டார். அவரது முறுக்கு மிகவும் டேஸ்ட்டாக இருந்ததால் அந்த பகுதியில் உள்ள அனைவரும் வாங்கிச்சென்றனர். இதனால் வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது

ஒரு கிலோவில் ஆரம்பித்த முறுக்கு மாவை தற்போது 5 கிலோ முதல் 10 கி9லோ வரை செய்து முறுக்கு சுட்டு வியாபாரம் செய்து வருவதாகவும் தினமும் ரூபாய் 500 வரை லாபம் கிடைப்பதாகவும் கூறியுள்ளார்

பேராசிரியர் வேலையில் கிடைத்த சம்பளம் இல்லை என்றாலும் இந்த வருமானம் தனது குடும்பத்தை நடத்த போதுமானதாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

பேராசிரியர் வேலையை இழந்தாலும் மனம் தளராமல் தனது குடும்பத்தை காப்பாற்ற முறுக்கு வியாபாரம் செய்து வரும் மகேஸ்வரன் அவர்களுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

From around the web