பிரியங்கா காந்தியின் தமிழக தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் நாளைய தமிழக தேர்தல் பிரச்சாரம் ரத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளில் பல கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியானது  திமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. 

congress

திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக மு க ஸ்டாலின் அறிவிக்கபட்டு சில தினங்களாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் அனைத்து பகுதிக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்க காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார் என்ற தகவல் முன்னதாக வெளியாகியது.

இந்நிலையில் அவர் நாளையதினம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவரது நாளைய தமிழக தேர்தல் பிரச்சாரம் ரத்தாகி உள்ளது. காரணம் என்னவெனில் அவரது கணவர் ராபர்ட் வதேரா கொரோனா உறுதியான நிலையில் அவரது நாளைய தேர்தல் பிரச்சாரம் ரத்தாகி உள்ளது. மேலும் பிரியங்கா காந்திக்கு கொரோனா இல்லை எனினும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதால் தமிழகம் வருகை ரத்து செய்யப்பட்டது. அவர் ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரியில் நாளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web