முதல்முறையாக பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் பிரியங்கா காந்தி!

பிரச்சாரம் செய்ய முதல் முறையாக நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி!
 
முதல்முறையாக பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் பிரியங்கா காந்தி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணியில் தேர்தலை சந்திக்க உள்ளன.  தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளிலும் பல கட்சிகள் பல்வேறு வேட்பாளர்களை அறிவித்து இருந்தனர். அந்த வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

congress

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மும்முரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பல கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழக சட்டமன்ற தேர்தல் மட்டுமின்றி கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது .கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதவியிலிருந்த வசந்த் மறைவைத் தொடர்ந்து அப்பகுதியில் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் காங்கிரஸ் சார்பில் அவரது மகன் விஜய் வசந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியின் விருப்ப மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி தமிழகத்தில் முதன் முறையாக பிரச்சாரம் செய்ய நாளை மறுநாள் வருகிறார் என்ற தகவல் வெளியானது.கன்னியாகுமரியில் நாளை மறுநாள் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள பிரியங்கா காந்தி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

From around the web