ரெயிலில் பயணம் செய்த 80 பேர் பலி… பிரியங்கா காந்தி பேட்டி!!

கொரோனாத் தொற்று மார்ச் மாதம் இந்தியாவில் கால் பதித்த நிலையில், கட்டுக்குள் கொண்டுவர் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது. இதனால் பலரும் தங்களது சொந்த ஊர் நோக்கிப் பயணம் செய்தனர். சிலர் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடைபயணம், சைக்கிள் பயணம் என பலநூறு கிலோமீட்டர்களைக் கடந்தனர். இந்த அவலத்தினைத் தடுக்கும்பொருட்டு, மத்திய அரசு சிறப்பு ரெயில்கள் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறது. அந்தவகையில் சிறப்பு ரெயில்கள்
 
ரெயிலில் பயணம் செய்த 80 பேர் பலி… பிரியங்கா காந்தி பேட்டி!!

கொரோனாத் தொற்று மார்ச் மாதம் இந்தியாவில் கால் பதித்த நிலையில், கட்டுக்குள் கொண்டுவர் மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 14 வரை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது.

இதனால் பலரும் தங்களது சொந்த ஊர் நோக்கிப் பயணம் செய்தனர். சிலர் அதிர்ச்சியளிக்கும் வகையில் நடைபயணம், சைக்கிள் பயணம் என பலநூறு கிலோமீட்டர்களைக் கடந்தனர்.

இந்த அவலத்தினைத் தடுக்கும்பொருட்டு, மத்திய அரசு சிறப்பு ரெயில்கள் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறது. அந்தவகையில் சிறப்பு ரெயில்கள் மூலம் பயணம் செய்தவர்களில் 80 பேர் உயிர் இழந்துள்ளனர்.

ரெயிலில் பயணம் செய்த 80 பேர் பலி… பிரியங்கா காந்தி பேட்டி!!

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பேட்டி அளித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “புலம் பெயர் தொழிலாளர்களை அழைத்துச் செல்ல செய்யப்பட்ட ஏற்பாடுகளில் பல குறைபாடுகள் உள்ளன, இவர்களின் பொறுப்பற்ற செயலால் ரெயில்களில் பயணம் செய்த 80 பேர் உயிர் இழந்துள்ளனர்.

ரெயில்வே துறை சரிவர எந்தவொரு விஷயத்தினையும் செய்யாத நிலையில் இதுபோன்ற பேரிழப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். இந்தியாவினை கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்த் கொடுத்திருக்க வேண்டும்.

மேலும் அனைவருக்கும் இன்னும் சிறப்பு ரெயிலில் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறவில்லை, உத்தரபிரதேசத்தில் இன்னும் பலர் நடந்தே பயணம் செய்யும் சம்பவம் நிகழ்ந்து வருகின்றது” என்று கூறியுள்ளார்.

From around the web