10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வழங்க லஞ்சம்: தனியார் பள்ளிகள் மீது பரபரப்பு புகார்

10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் நீதிமன்றத்தின் கோரிக்கையை அடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையிலும், வருகைப் பதிவேட்டின் அடிப்படையிலும், மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே உறுதி செய்யும் நிலை ஏற்பட்டு
 

10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வழங்க லஞ்சம்: தனியார் பள்ளிகள் மீது பரபரப்பு புகார்

10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் நீதிமன்றத்தின் கோரிக்கையை அடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வின் அடிப்படையிலும், வருகைப் பதிவேட்டின் அடிப்படையிலும், மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே உறுதி செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது இதனை அடுத்து ஒரு சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் 10ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்க பணம் வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிக மதிப்பெண்கள் வழங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெறுவதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக விசாரணை செய்து மோசடிகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

From around the web