தனியார் இன்சூரன்ஸில் பணிபுரிந்த இளம்பெண் திடீர் தற்கொலை: என்ன காரணம்?

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் பணி செய்து கொண்டு பணி செய்து வந்த பெண் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹரிகனேஷ்-பிரியதர்ஷினி என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர் ஹரிகனேஷ் தனியார் வங்கியிலும், பிரியதர்ஷினி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இருவருமே வீட்டிலிருந்து பணி செய்து வந்ததாக
 

தனியார் இன்சூரன்ஸில் பணிபுரிந்த இளம்பெண் திடீர் தற்கொலை: என்ன காரணம்?

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் பணி செய்து கொண்டு பணி செய்து வந்த பெண் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஹரிகனேஷ்-பிரியதர்ஷினி என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர்

ஹரிகனேஷ் தனியார் வங்கியிலும், பிரியதர்ஷினி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இருவருமே வீட்டிலிருந்து பணி செய்து வந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் நேற்று இரவு பிரியதர்ஷினி தனது வேலைக்கு கணவரிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு உதவி செய்ய மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

இதனால் கோபமடைந்த பிரியதர்ஷினி தனி அறையில் உறங்கியதாகவும், காலையில் நீண்ட நேரம் அவரது அறையின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ஹரிகணேஷ் கதவை உடைத்து பார்த்தபோது பிரியதர்ஷினி உள்ளே தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிகிறது

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பிரியதர்ஷினி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் தற்போது கணவர் ஹரிகணேஷிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web