கொரோனா சிகிச்சைக்கு இவ்வளவு கட்டணமா? அதிர்ச்சியில் தமிழக மக்கள்

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் பெற வேண்டிய கட்டணம் குறித்து விரைவில் நிர்ணயம் செய்யப்படும் என ஏற்கனவே தகவல் வந்தது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்து ஐ.எம்.ஏ தமிழக பிரிவு சற்று முன்னர் அறிவிப்பு செய்துள்ளது இதன்படி லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 வசூலிக்கவும், திவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 வசூலிக்கவும், மேலும் மருத்துவர்கள், தனிமைப்படுத்தும் பணியாளர்களுக்கான
 

கொரோனா சிகிச்சைக்கு இவ்வளவு கட்டணமா? அதிர்ச்சியில் தமிழக மக்கள்

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் பெற வேண்டிய கட்டணம் குறித்து விரைவில் நிர்ணயம் செய்யப்படும் என ஏற்கனவே தகவல் வந்தது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு கட்டணம் எவ்வளவு என்பது குறித்து ஐ.எம்.ஏ தமிழக பிரிவு சற்று முன்னர் அறிவிப்பு செய்துள்ளது

இதன்படி லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 வசூலிக்கவும், திவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 வசூலிக்கவும், மேலும் மருத்துவர்கள், தனிமைப்படுத்தும் பணியாளர்களுக்கான கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.9600 வரை நிர்ணயிக்கலம் என்றும் ஐஎம்ஏ தமிழகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஐஎம்ஏ அறிவித்துள்ள இந்த கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் இந்த கட்டணத்தை மேலும் குறைக்க வேண்டும் என்றும் ஏழை எளிய நடுத்தர மக்கள் இந்த கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாட்டில் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்

From around the web