தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தந்து கொண்டிருந்தாலும் ஒரு சிலர் அரசு மருத்துவமனையில் இடம் இல்லாத காரணத்தினால் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர் ஆனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக கடந்த சில நாட்களாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் குறித்த ஐ.எம்.ஏ தனது பரிந்துரைகளை தெரிவித்து இருந்தது. இதில் லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 ஆகவும், அதிக பாதிப்புள்ள
 
தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு? தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை தந்து கொண்டிருந்தாலும் ஒரு சிலர் அரசு மருத்துவமனையில் இடம் இல்லாத காரணத்தினால் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர்

ஆனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக கடந்த சில நாட்களாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் குறித்த ஐ.எம்.ஏ தனது பரிந்துரைகளை தெரிவித்து இருந்தது.

இதில் லேசான பாதிப்புள்ள நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக ரூ.2,31,820 ஆகவும், அதிக பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயம் சிகிச்சை கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக அனைவரும் விமர்சனம் செய்தனர்

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி பொது வார்டில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 5,000 முதல் 7,000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல் தீவிர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றால் அவர்களுக்கு தினமும் ரூபாய் 15,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது இந்த கட்டணமும் அதிகமாக இருப்பதாகவும் இதை இன்னும் கொஞ்சம் குறைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

From around the web