"தனியார் பங்களிப்பு-கொரோனா சிகிச்சை மையம் திறப்பு"-முதல்வர்

சென்னையில்  கொரோனா  சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வரான மு க ஸ்டாலின்!
 
camp

அப்போது தமிழகத்தின் முதல்வராக உள்ளார் திமுக தலைவரான மு க ஸ்டாலின். மேலும் அவர்தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தில் முதன் முறையாக முதல்வராக உள்ளார் தி மு க ஸ்டாலின். இந்நிலையில் தனது ஆட்சியின் தொடக்க முதலே மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளார் தமிழக முதல்வரான மு க ஸ்டாலின். அவர் தலைமையில் தமிழகத்தில் இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.stalin

தொற்றானது கட்டுப்படுத்தப்படவில்லை என்பதால் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு  அவர் நேற்றைய தினம் கூறியிருந்தார். அதனால் இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் கடைகள் போன்றவைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கொரோனா சிகிச்சை மையங்களையும் அவ்வப்போது திறந்து வைக்கிறார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

அதனை தொடர்ந்து தற்போது சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் 130 ஆக்சிசன் படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையத்தை நம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மேலும் இதனை தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது .மேலும் இந்த மையத்தில் 21 மருத்துவர்களும் 33 செவிலியர்களும் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என்றும் கூறபடுகிறது. இந்த கொரோனா பரிசோதனை செய்யவும் கொரோனா நோய் உறுதியானால் சிகிச்சை மேற்கொள்ளவும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web