தனியார் நிறுவனங்களே ஒரு வாரத்துக்கு வீட்டிலேயே வேலை பாருங்கள்!!!

மே 24 ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரிய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது!
 
work from home

தற்போது நம் தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளன இந்த முழு ஊரடங்கை மீண்டும் நம் தமிழகத்தில் அமல்படுத்தியுள்ளது புதிதாக ஆட்சி அமைத்த அரசு. அந்த படி தமிழகத்தில் தற்போது பத்து ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்துள்ளது திராவிட முன்னேற்ற கழகம். திமுக சார்பில் முதல்வராக அக்கட்சியின் தலைவரான முகஸ்டாலின் உள்ளார். மேலும் அவர் ஆட்சியில் வந்த உடனே மக்களுக்கு நல்லது பண்ண வேண்டும் என்ற எண்ணத்தோடு மிகுந்த திறம்பட தனது பணியினை செய்து வருகிறார்.  நம் தமிழகத்தில் கொரோனா நோயின் பரவல் அதிகமாக காணப்படுகிறது.tamilnadu

இதனால் கொரோனா நோயை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல் படுத்தினார். ஆயினும் பல பகுதிகளில் தடைகள் மட்டும் தளர்வுகள் இருந்தன. இந்நிலையில் தற்போது சில அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மே 24ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு எவ்வித தடையும் இன்றி முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளது. இதற்கு ஏற்பாடு செய்ய நாளை தினம் எந்த ஊரு ஊரடங்கும் இன்றி கடைகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளன.

இந்நிலையில் தற்போது தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி மே 24-ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவை வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டுகோள் விடுத்துள்ளது நம் தமிழக அரசு. இதனால் தனியார் ஊழியர்கள் அனைவரும் தங்களது வீடுகளிலிருந்து அடுத்த ஒரு வார காலத்திற்கு பணிபுரிய வேண்டும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

From around the web