"லஞ்சம் கொடுத்து சிறையில் வசதிகள்" சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!!

லஞ்சம் கொடுத்து சிறையில் வசதிகள் பெற்ற வழக்கில் சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
 
sasikala

தற்போது உள்ள எதிர்க்கட்சி அதிமுக  கட்சிக்குள்ளேயே குழப்பம் நிகழ்கிறது. மேலும் அவ்வப்போது இது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் குறித்து அவர்கள் தொண்டர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு காணப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது இந்த கட்சிக்கு மிகவும் சவாலாக காணப்படுகின்றார் சசிகலா. மேல் இவர் அதிமுக கட்சியின் முதல்வராக இருந்து மரணமடைந்த செல்வி ஜெயலலிதாவின் தோழி ஆவார்.sasikala

மேலும் அவர் இந்த கட்சியில் முக்கியமான ஒரு பொறுப்பேற்பார் என்ற நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து தற்போது அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி லஞ்சம் கொடுத்து சிறையில் வசதிகள் பெற்ற வழக்கில் சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்பு போலீசார்.

சசிகலா லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்க கோரி கீதா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். கீதா மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 25 ஆம் தேதியில் குற்றப்பத்திரிகையை அளிக்க கண்டிப்புடன் உத்தரவிட்டது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததை அடுத்து செப்டம்பர் 7ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த போது சசிகலாவுக்கு வசதிகள் செய்துதர பட்டதாகவும் வழக்கு தொடுக்கப்பட்டது.

From around the web