கொரோனா தடுப்பூசி! மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை! ஐகோர்ட் உத்தரவு!

கொரோனா தடுப்பூசி போடுவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது!
 
கொரோனா தடுப்பூசி! மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை! ஐகோர்ட் உத்தரவு!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோயாக வந்துள்ளது கொரோனா. மனிதனின் கண்ணுக்கு தெரியாமல்  உடம்புக்குள் புகுந்துஇறுதியில் மனிதனை இறப்பிற்கு தள்ளிவிடுகிறது. இந்த கொரோனா கடந்த ஆண்டில் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் எழுந்துள்ளது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. மேலும் பல மாநில அரசுகள் பல்வேறு விதிமுறைகளை கட்டுப்பாட்டு விதிகளையும் விதித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இருபதாம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  மத்திய அரசின் சார்பில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

tamilnadu

 தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும்  தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் அனைத்து மையங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை தர தயாராக உள்ளதாகவும் சென்னை தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது. மேலும் முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் சேர்ப்பது குறித்த கடிதத்திற்கு மத்திய அரசிடமிருந்து பதில் இல்லை என்றும் தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது.

மேலும் கவுண்டர்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில்சாய்தள  தளத்தை அமைக்கவுள்ளதாக  தமிழக அரசின் சார்பில் கூறப்படுகிறது.  மேலும் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி போட வயது வரம்பு நிர்ணயிப்பது குறித்து மூன்று நாளில் முடிவெடுக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

From around the web