பிரதமர் -முதல்வர் காணொலி ஆலோசனை! விவரித்துக் கூறினார் முதல்வர்!

தலைமைச் செயலகத்திலிருந்து காணொளியில் அரசு அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமருடன் ஆலோசனை மேற்கொண்டார்!
 
பிரதமர் -முதல்வர் காணொலி ஆலோசனை! விவரித்துக் கூறினார் முதல்வர்!

தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறையில் உள்ளன. மேலும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் பல்வேறு மாநிலங்களில் காணப்படும் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பானது கணிசமாக குறைந்து வருகிறது. தமிழகம் கர்நாடகா கேரளா புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களில் இந்த கொரோனா  பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நம் கண்முன்னே தெரிகிறது.modi

பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் கர்நாடகா உட்பட 10 மாநிலங்களோடு காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.  தமிழக முதல்வரான   மு க ஸ்டாலின் இந்த காணொளியில் பங்கேற்றிருந்தார். மேலும் அவர் ஆலோசனையில் அவரோடு சேர்த்து சில அதிகாரிகளும் அமர்ந்து இருந்தனர் என்பதும் காணப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனை ஆனது தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் காணொளி மூலம் நடத்தப்படுகிறது.

இது நம் முதல்வரான மு க ஸ்டாலின் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் விளக்கமாக கூறினார். மேலும் அவர் தமிழகத்திற்கு கூடுதலான ஆக்சிஜன் வழங்குமாறும் அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசியை அதிகரித்து வழங்கவும் முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் சில அதிகாரிகளும் இதுகுறித்து விவரித்துக் கூறினார் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம்.

From around the web