தலை வணங்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கம்!

அம்பேத்கருக்கு தலை வணங்குகிறேன் என்று கூறும் பாரத பிரதமரின் ட்விட்டர் பக்கம்!
 
தலை வணங்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கம்!

இந்தியாவில் வெள்ளையர்கள் ஆட்சிக்கு போயி கொள்ளையர்கள் ஆட்சிக்கு வந்தார்கள் என்று பல பகுதிகளில் கூறப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் மக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர். மேலும் ஒரு சில பகுதிகளில் மக்கள் ஜாதி வாரியாகவும் இனம் ஒடுக்கப்பட்டு வருவதே மேலும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில் சுதந்திர இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக் குரலாக இருந்தவர் டாக்டர் அம்பேத்கார்.

modi

மேலும் அவர் தனது பள்ளிப் பருவம் முதலே மிகவும் ஒடுக்கப்பட்டு வந்ததால் அவர் நன்றாக படித்து சட்ட மேதையாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அரசியலமைப்பின் சட்டங்களை இவரை வகுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல நீதிமன்றங்களிலும் காவல் நிலையத்தில் இவரது போட்டோ இல்லாத இடமே இல்லை. இந்நிலையில் இப்பேர்ப்பட்ட மனிதனுக்கு இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொரு தலைவரும் இவர்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர் .

மேலும் தமிழகத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போன்றோர் இவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இந்தியத் திருநாட்டின் பாரதப் பிரதமரான நரேந்திர மோடியும் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அதன்படி பாரத ரத்னா டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கருக்கு தான் தலை வணங்குகிறேன் என்றும் கூறினார். மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக அம்பேத்கர் போராடியது பல தலைமுறைகளுக்கு உதாரணமாக திகழும் என்றும் அவர் கூறினார். இதுபோன்ற பல தலைவர்களும் இவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

From around the web