பிரதமர் நரேந்திர மோடி நாளை புதுச்சேரி வருகை! புதுச்சேரியில் 144 தடை உத்தரவு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை புதுச்சேரிக்கு வர இருப்பதால் ஒரு நாள் 144 தடையை உத்தரவிட்டுள்ளது புதுச்சேரி அரசு!
 
பிரதமர் நரேந்திர மோடி நாளை புதுச்சேரி வருகை! புதுச்சேரியில் 144 தடை உத்தரவு!

சட்டமன்றத்தேர்தல் நெருங்கிய நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகள் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளிலும் பல கட்சிகள் பல்வேறு கூட்டணியுடன் இணைந்து உள்ளன. மேலும் சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்துள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை வைத்துள்ளது.

modi

அதற்காக அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் ஒரு மக்களுக்கு சீட்டு கொடுக்கப்பட்டது. 20 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி தாராபுரத்தில் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் போட்டியிடவுள்ளார். மேலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு வேட்பாளராக அறிவிக்க பாரத பிரதமர் நரேந்திர மோடி நாளை தாராபுரத்தில் நடக்கவிருக்கும்  பிரச்சாரக் கூட்டத்திற்கு வர இருப்பதாக தகவல்.

மேலும் அவர் நாளை புதுச்சேரி செல்ல இருப்பதாக  மாநில அரசு கூறியது. இதனால் புதுச்சேரியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரி அரசு புதுச்சேரியில் நாளை வரை டிரோன்கள்பறக்க தடை விதிக்கப்படுகிறது என புதுச்சேரி அரசு தரப்பில் கூறப்படுகிறது. 144 தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்.

From around the web