ஐபிஎல் மாதிரி பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

க்ளீன் போல்ட் ஆனார் மம்தா என்று  பிரச்சாரத்தில் கூறினார் பாரத பிரதமர் நரேந்திர மோடி!
 
ஐபிஎல் மாதிரி பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சொல்லியிருந்தபடி ஏப்ரல் 6ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் பல கட்சிகள் களமிறங்கி இருந்தன. இதில் ஆளும் கட்சி அதிமுக கட்சி மத்தியில் ஆளும் பாஜக, பாமக கட்சியை கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தல்  சந்தித்தன. தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும்  சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன.  சட்டமன்ற தேர்தல் புதுச்சேரி மட்டுமின்றி மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் நடைபெறுகிறது.

mamata

மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும். இந்நிலையில் இதுவரை நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்திற்காக பாரத பிரதமர் நரேந்திரமோடி சென்றிருந்தார். பிரச்சாரத்தில் கிரிக்கெட் கமென்ட்ரி போன்று சில வார்த்தைகளை கூறியிருந்தார். அதன்படி மேற்கு வங்க மக்கள் சிக்சர்களையும், போர்களையும் பாஜகவுக்கு 100 இடங்களுக்கு மேல் தந்து விட்டதாக அவர் கூறினார். மேலும் மம்தா பானர்ஜி க்ளீன் போல்ட் ஆனதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மேலும் அவர் கூறினார் மம்தா பானர்ஜி கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் மோடி கூறினார். மேலும் மம்தா பானர்ஜி கோபத்தை தணிப்பதற்கு என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அவதூறாக பேசிக் கொள்ளட்டும் எனவும் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறினார். மேலும் மம்தாவை க்ளீன் போல்ட் செய்து விட்டு அவரது அணியை வெளியேறியதாகவும் பிரதமர் மோடி கூறினார். மேலும் மம்தா பானர்ஜி மக்கள் பிளவுபடுத்தி வருகிறார் ,ஆனால் நான் மக்களை ஒருங்கிணைத்து வருகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

From around the web