7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை! மீண்டும் ஊரடங்கா?

 

தமிழகம் உள்பட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி விரைவில் அவசர ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது 

தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 

அதேபோல் மகாராஷ்டிரா கர்நாடகம் உத்தரப் பிரதேசம் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளாவில் நேற்று 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் செப்டம்பர் 23ஆம் தேதி காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழக முதல்வர் உள்பட 7 மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த ஆலோசனையின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பிறகு ஒரு சில அதிரடி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 

ஏற்கனவே வரும் 30ம் தேதி ஏழாம் கட்ட ஊரடங்கு முடிவடைவதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்தும் இந்த ஆலோசனையில் தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது

From around the web