ஆலோசனைக்கு பின்னர் அதிரடி உத்தரவினை போட்டார் பிரதமர் மோடி!

காணொலி வாயிலாக உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக்கு பின்னர் பல அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி!
 
ஆலோசனைக்கு பின்னர் அதிரடி உத்தரவினை போட்டார் பிரதமர் மோடி!

மக்கள் மத்தியில் தற்போது வழங்கும் வரும் உயிர் கொல்லியான கொரோனாக்கு எதிராக பல மாநிலங்களும் பல்வேறு தடுப்பு விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது. எனினும் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு ஒரு சில மாநிலங்களில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வேகமாக அதிகரித்து வருகிறது.இதற்கு  மத்திய அரசின் சார்பில் பல்வேறு மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பல மாநிலங்களில் இந்த தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவுகிறது எனினும் இந்த கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் போது ஆக்சிசன் தேவைப்படுகிறது.

modi

ஆனால் பல மாநிலங்களில் தற்போது இந்த தடுப்பூசி தொடர்ந்து ஆக்சிசன் பற்றாக்குறையும் நிலவுகிறது. ஆக்சிசன் தட்டுப்பாடு குறித்த உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று மதியம்பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டிருந்தார். தற்போது ஆலோசனையின் முடிவில் பல அதிரடி உத்தரவுகளையும் பாரத பிரதமர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதன்படி ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக மாநிலங்களுக்கு தடையின்றி மருத்துவ ஆக்சிசனை வினியோகிக்க நாடு முழுவதும் ஆக்சிசன் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவசர தேவைக்காக விமானங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகிக்கவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் மாநிலங்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிக அளவு தேவைப்படும் 20 மாநிலங்களில் விநியோகத்தை திட்டமிட்டு உறுதிப்படுத்த பிரதமர் மோடி ஆணையிட்டுள்ளார். மேலும் களிடமிருந்து 3300 டன் ஆக்சிஜன் பெறப்பட்டு மருத்துவ தேவைக்காக அனுப்பப் பட்டுள்ளது என்றும் தகவல்களையும் கூறியுள்ளார்.

மேலும் 20 மாநிலங்களில் 6822 டன் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் ஆக்சிசன் உற்பத்தி, கையிருப்பு ,தேவை விநியோகத்தை போன்ற பலவற்றை அதிகாரிகள் தினசரி கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.

From around the web