மார்ச் 30ஆம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரி வருகிறார்!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தின் நடைபெற உள்ளது. அதற்காக பல்வேறு ஏற்பாடுகள் தமிழகத்தில் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தொகுதிகளில் பல்வேறு கட்சிகளும் கூட்டணியில் உள்ளன. சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமன்றி புதுச்சேரியிலும் நடைபெற உள்ளது.

புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. 30 தொகுதிகளில் பல கட்சிகள் பல்வேறு கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனர். இதில் என்ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கட்சி கூட்டணியில் உள்ளது .அதற்காக பாஜகவிற்கு 10 தொகுதிகளும் ,என் ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளும், அதிமுகவிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
பாரத பிரதமராக உள்ள நரேந்திர மோடி சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக புதுச்சேரி வருகிறார். அவர் புதுச்சேரிக்கு மார்ச் மாதம் 30ஆம் தேதி வர இருப்பதாகவும் தகவல் வெளியானது. புதுச்சேரியில் ஏற்பாடுகள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளன.