நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி: பெரும் எதிர்பார்ப்பு

 
modi

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாக அறிவிக்கும் போது சில சலுகைகளை அறிவிப்பார் என்றும், ஒரு சில முக்கிய அறிவிப்புகளை அறிவிப்பார் என்றும் நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

அந்த வகையில் இன்று அவர் என்ன அறிவிக்கப் போகிறார்? என்பதை நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது குறித்து பிரதமர் பேசுவார் என்றும், நாட்டு மக்களுக்கு சில சலுகைகளை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அனைவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவிப்பார் என்றும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலவசம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

From around the web