தமிழ் புத்தாண்டன்று பிரதமர் அனைத்து மாநில அவர்களுடன் ஆலோசனை!

நாளை மறுநாள் அனைத்து மாநில ஆளுநர்கள் உடன் பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் ஆலோசனை!
 
தமிழ் புத்தாண்டன்று பிரதமர் அனைத்து மாநில அவர்களுடன் ஆலோசனை!

மக்கள் மத்தியில் உயிரை குடிக்கும் நோயாக கொரோனா காணப்படுகிறது.கொரோனா நோயானது சீன மக்களிடையே காணப்படுகிறது. அதன் பின்னர் உலகில் வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் பாகுபாடின்றி பரவியது. மேலும் பல நாடுகள் இதற்கு தீர்வு என்ன என்று குழப்பத்திலும் வேதனையும் இருந்த நிலையில் இந்தியாவிலும் இந்த கொரோனா நோயானது கடந்த ஆண்டின் ஆரம்ப காலத்தில் வரத்தொடங்கியது.இந்திய அரசானது எந்த ஒரு நாடும் கையில் எடுக்காத முழு ஊரடங்கு திட்டத்தை நாடெங்கும் அமல்படுத்தியது.

modi

அதன் பின்னர் கடந்த ஆண்டின் இறுதியில் நோயின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். மேலும் அவர்கள் மகிழ்ச்சியில் சிறிது காலம் கூட நீடிக்கவில்லை கடந்த சில நாட்களாக கொரோனா நோயானது  வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசின் சார்பில் சில தினங்களுக்கு முன்பு பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளும் போடப்பட்டுள்ளன.

மேலும் அந்த கட்டுப்பாட்டு விதிகள்   10ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியிருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியினை போட்டுக் கொண்டார். அவர் மார்ச் 1ஆம் தேதி அதே மருத்துவமனையில் முதலாவது தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தற்போது சில தகவலை வெளியிட்டுள்ளார் .அதன்படி அனைத்து மாநில ஆளுநர்கள் உடன் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி ஆலோசனை உள்ளதாகும்  வெளியாகிறது. மேலும் இந்த ஆலோசனையை ஆனது ஏப்ரல் 14ஆம் தேதி மாலை ஆறு முப்பதுக்கு நடைபெற உள்ளதாகவும் தகவல். இந்த ஆலோசனை  நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து தொடர்ந்து நடைபெற உள்ளதாகவும்,பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அவர் மேற்கொள்ளவுள்ளார்.

From around the web