கருப்பு பூஞ்சை மருந்துக்கு விலை நிர்ணயம்

 
black fungu

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது புதிதாக கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பதும் கருப்பு பூஞ்சை நோயினாலும் ஒருசில உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது போல் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஆம்போடெரிசின் என்ற மருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை வர்தா நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த மருந்தின் விலை தற்போது 1200 என அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதும் இந்த மருந்து நாளை முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விநியோகிக்கும் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் கருப்பு பூஞ்சை மருந்து ரூ.1200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு மேல் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

From around the web