ஒரு வழியா விலை குறைப்பு! ஆனால் தனியார் மருத்துவமனையில் அதே விலை!

இந்தியாவில் கோவி ஷீல்டு தடுப்பூசி விலை 100 ரூபாய் குறைந்ததாக சிரம் இந்தியா அறிவித்துள்ளது!
 
ஒரு வழியா விலை குறைப்பு! ஆனால் தனியார் மருத்துவமனையில் அதே விலை!

தற்போது நாடெங்கும் பரவிக் காணப்படும் கொரோனாக்கு எதிராக ஒவ்வொரு மாநில அரசுகளும் மிகவும் எதிர்த்துப் போராடுகின்றன. மேலும் அவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும் தங்களை தன்னைத்தான் காத்துக் கொள்கின்றனர். மேலும் மத்திய அரசின் சார்பில் தடுப்பூசிகள் மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பல பகுதிகளில் இந்த கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிகமாக காணப்பட்டது. அதை விட கொடுமை என்னவென்றால் கொரோனா தடுப்பூசியை தட்டுப்பாட்டை விட தடுப்பூசியின் விலையே மக்களுக்கு அதிர்ச்சியளித்தது.seram

எதிராக பல மாநிலங்களில் எதிர்ப்பு அலைகள் பரவின. தயாரிப்பு நிறுவனமான சீரம் இந்தியா சில மகிழ்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி விலையானது இந்தியாவில் 100 ரூபாய் குறைக்கப்படுகிறது. மேலும் மாநில அரசுகளுக்கு சீரம் இந்தியா நிறுவனம் விற்கும் தடுப்பூசி விலை 25 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. மேலும் மாநில அரசுகளுக்கு தலா 400 ரூபாய் விலையில் கொரோனா தடுப்பு ஊசி விற்கப்படும் என சீரம் இந்தியா அறிவிப்பு இருந்தது .

ஆனால் தற்போது மத்திய அரசுக்கு ரூபாய் 150 கொடுக்கும் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதாக கடும் எதிர்ப்பு எழுந்தது. நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பை அடுத்து மாநிலங்களுக்கு வழங்கும் தடுப்பூசியை 300 ரூபாய்க்கு விற்பதாக சீரம் இந்தியா அறிவித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட 600 ரூபாய் விலையில் மாற்றம் ஏதுமில்லை எனவும் சீரம் இந்தியா அறிவித்துள்ளது.

From around the web