முன்பு சிறிய அலை தற்போது சுனாமி போல அலை-கட்டுப்படுத்த முடியாது!

தற்போது சுனாமி போல கொரோனா அலை வருகிறது என்று கூறியுள்ளார் கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரி சித்திக்!
 
முன்பு சிறிய அலை தற்போது சுனாமி போல அலை-கட்டுப்படுத்த முடியாது!

 தற்போது நாடெங்கும் கொரோனா  எதிராக மிகவும் கடினமான சூழ்நிலையில் போராடி வருகிறது. இந்த கொரோனா  மிகுந்த வேதனை அளிக்கிறது.எனினும் அரசானது தனது நடவடிக்கைகளில் பின்வாங்காமல் மேலும் மேலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வளப்படுத்துகிறது அவ்வப்போது தெரியவந்துள்ளது. மேலும் அதற்கெதிராக பல தடுப்பு மருந்துகளையும் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா  நோயின் தாக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறலாம்.corona

மேலும் இதற்கு போராட்டமாக மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றியும் தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது கொரோனா  தடுப்பு பணி சிறப்பு அதிகாரியாக உள்ள சித்திக் என்பவர் செய்தியாளர்களை சந்தித்த சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி முன் முதல் கொரோனா அலை சிறிய அளவில் இருந்தது என்றும் அவர் கூறினார்.

தற்போதுள்ள அலை சுனாமி போல உள்ளதாகவும் அவர் கூறினார். இதனால் நாம் எதிராகப் போராடுவது மிகவும் கடினமாக உள்ளது. அரசின் சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கையும் எடுத்து வருகின்றோம் என்றும் கூறியுள்ளார். ஆக்ஸிஜனின் மற்றும் தடுப்பூசி உற்பத்தியும் அதிகம் உற்பத்தி செய்வதாக கூறியுள்ளார். மேலும் இதனை அரசால் மட்டுமே கையாள முடியாது, மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web