முன்பு 6 பேருக்கு இருந்தது; தற்போது 7 பேருக்கு உருவாகி உள்ளது! "ஒரே காவல் நிலையத்தில்"

சென்னை ஐஎஸ்அவுஸ் காவல்நிலையத்தில் ஏழு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது!
 
முன்பு 6 பேருக்கு இருந்தது; தற்போது 7 பேருக்கு உருவாகி உள்ளது! "ஒரே காவல் நிலையத்தில்"

தற்போது எங்கும் கொரோனா எதிலும்கொரோனா என்ற நிலைமைதான் தமிழ்நாடு எங்கும் நிலவுகிறது. மேலும் எங்கே சென்றாலும் கொரோனா என்ற அச்சம் தமிழக மக்கள் மனதில் அதிகமாக நிலவுகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து செல்வதும் சமூக இடைவெளி பின்பற்றியுள்ளனர். ஆயினும் இந்தக் கொரோனாவானது இதன் தாக்கத்தை குறைவதாகவே இல்லை என்றே கூறலாம். ஆகிலும் இதற்காக மருத்துவர்கள் பலரும் தங்களது உயிரினை பெரிதும் எனாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.corona

இந்நிலையில் இந்நோயின் தாக்கம் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் இரண்டாவது அலையாக இருந்து மக்களுக்கு மிகுந்த துன்பத்தையும் கஷ்டத்தையும் கொடுத்து வக்கிறது. மேலும் இந்த கொரோனா நோய்க்கு எதிராக போராடும் போலீசாருக்கும் அவ்வப்போது கொரோனா கண்டறியப்பட்டுள்ளது கூறப்படுகிறது. தற்போது ஒரே காவல் நிலையத்தைச் சேர்ந்த 7 காவலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கூறபடுகிறது.

இச்சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. அதன்படி சென்னை ஐஎஸ்அவுஸ் காவல் நிலையத்தில் காவலர் ஏழு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலைய தலைமை காவலர் புருஷோத்தமன் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் ஏற்கனவே இந்த காவல் நிலையத்தில் 6 காவலருக்கு உறுதியான நிலையில் தற்போது இன்று 7 ஆக அதிகரித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் அளித்துள்ளது.

From around the web