முன்னர் அந்த ஆலைக்கு, தற்போது இந்த ஆலைக்கு ஆதரவு: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

திருச்சி பெல் ஆலையில் ஆக்ஸிஜனின் உற்பத்தியை தொடங்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார்!
 
முன்னர் அந்த ஆலைக்கு, தற்போது இந்த ஆலைக்கு ஆதரவு: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக பல்வேறு கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளன. இவர்கள் கூட்டணியில் குறிப்பாக காணப்பட்டது மதிமுக என்றே கூறலாம். மேலும் இந்த மதிமுகவிற்கு திமுக சார்பில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக மதுரை தெற்கு தொகுதியில் மதிமுகவிற்கு ஒதுக்கியது திமுக. மதிமுக பொதுச் செயலாளராக உள்ளார் வைகோ, அவர்  தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார்.BHEL

இந்நிலையில் அவர் சில தினங்களாக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் அவர் சில வருடங்களாகவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில தினங்கள் முன்பு நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் மதிமுகவுக்கு அழைப்பு விடாதநிலையிலும் மதிமுக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என கூறியுள்ளது.  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தற்போது மற்றும் ஒரு ஆலைக்கு ஆதரவாக கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆளை மலைக்கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் திருச்சி மாநகரில் உள்ளது. மேலும் திருச்சி மாநகரில் உள்ள பிரபலமான பெல்  ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி செய்வதற்காக அந்த ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இதற்கு முன்னதாகவே இந்த பெல் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிசன் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். மேலும் எட்டு மணி நேரத்தில் 1000 கியூப்  மீட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம் எனவும் அவர் கூறியிருந்தார். அதனால் அவர் திருச்சியில் பெல்  ஆலைக்கும் ஆதரவாக பேசி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

From around the web