டிக்டாக் செயலிக்கு தடை விதித்தது அமெரிக்கா: அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீசாட் ஆகிய இரண்டு செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது டிக்டாக், வீசாட் உள்ளிட்ட 106 செயலிகளை இந்தியா தடை செய்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்திற்கும் டிக்டாக் மற்றும் வீசாட் ஆகிய இரண்டு செயலிகளும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஏற்கனவே அவர் குறிப்பிட்டிருந்தார் இந்த நிலையில் டிக்டாக்,
 

டிக்டாக் செயலிக்கு தடை விதித்தது அமெரிக்கா: அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு

இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீசாட் ஆகிய இரண்டு செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

டிக்டாக், வீசாட் உள்ளிட்ட 106 செயலிகளை இந்தியா தடை செய்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்திற்கும் டிக்டாக் மற்றும் வீசாட் ஆகிய இரண்டு செயலிகளும் அச்சுறுத்தலாக இருப்பதாக ஏற்கனவே அவர் குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் டிக்டாக், வீசாட் ஆகிய இரு செயலிகளை 45 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இரு செயலிகள் பயனாளிகளின் விவரங்களைத் திரட்ட இருப்பதாகவும் அமெரிக்கர்களின் தனிப்பட்ட மற்றும் அவர்களுடைய தகவல்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி வசம் சென்று விடும் ஆபத்து இருப்பதாலும் டிக்டாக், செயலிகளின் தடைக்கு காரணங்களாக அவர் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில் டிக் டாக் செயலி மற்றும் வீசாட் செயலி உரிமையாளர்கள் மற்றும் அவர்களுடைய நிறுவனங்களோடு அமெரிக்காவில் யாரும், எந்த நிறுவனமும் பரிவர்த்தனை வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் டிரம்பின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

From around the web