குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன் உடல் நிலை முன்னேற்றம்!

ஐசியூவில் இருந்து  எய்ம்ஸ்  சிறப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!
 

இந்திய திரு நாடானது 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இதனால் இந்தியர்கள் மிகவும் கொண்டாடுகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது .மேலும் இந்தியா நாடானது 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நிலையில், 1950ஆம் ஆண்டு தான் குடியரசாக மாறியது. மேலும் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினமாக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப் படுகிறது.

ramnath

 இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் இருந்தார். அதைத் தொடர்ந்து இந்தியாவில்5 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்   தலைவர்கள் மாறுகின்றனர். அவர்கள் வரிசையில் அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாம், பிரதிபா பாட்டில் போன்றவரும் இந்திய  தலைவராக இருந்தனர். இந்நிலையில் பிரணாப் முகர்ஜியும் இந்தியாவின் குடியரசுத் தலைவராக  இருந்தார். தற்போது இந்தியாவின்  குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் உள்ளார்.

மேலும் இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசு தலைவர் தான் என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாகும்.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 30ஆம் தேதி இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இந்த இருதய அறுவை சிகிச்சையானது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்றதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது. இதனால் அவர் ஐசியூவில் இருந்து  சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவர்களின் தொடர்பில் உள்ள ராம்நாத் கோவிந்த் இன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web