தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி! பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா இல்லை!

தேமுதிக பொருளாளரும் விருத்தாச்சலம் வேட்பாளருமான பிரேமலதாவுக்கு கொரோனா இல்லை!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதில் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் தனது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. மேலும் தமிழகத்தில் எந்த ஒரு கூட்டத்திலும் இன்றி 234 தொகுதிகளில் தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது நாம் தமிழர் கட்சி.

corona

 கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக கட்சியானது முதலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக கட்சியின் சார்பில் தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை தேமுதிக கட்சி அமமுக எனப்படும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்து சந்திக்க உள்ளது.

அதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விருத்தாச்சலம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக உறுப்பினர்கள்  கொரோனா உறுதியானது.சுஜித் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா  கொரோனா உறுதியானது. இதைத்தொடர்ந்து பிரேமலதா  கொரோனா பரிசோதனை நடந்து ,மேலும் பரிசோதனை முடிவில் கடலூர் சுகாதாரத்துறை அதிகாரி செந்தில் கூறினார் அவர் பிரேமலதாவுக்கு  கொரோனா இல்லை எனக் கூறினார்.

From around the web