கமல்ஹாசனின் 3வது அணி குறித்து பிரேமலதா!

 

தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை அதிமுக, திமுக கூட்டணியை தவிர மூன்றாவது கூட்டணியில் பெரிதாக அமையவில்லை என்றும் அப்படி அமைந்த கூட்டணியும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்துள்ளது என்பதும் வரலாறு

இந்த நிலையில் கழகங்களுடன் கூட்டணி இல்லை என்று கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் மூன்றாவது அணி அமைக்க போவதாக சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். அவரது மூன்றாவது அணியில் எந்தெந்த கட்சிகள் இணையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 

அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காமல் வெளியே வரும் கட்சிகள் கமல்ஹாசன் தலைமையில் மூன்றாவது அணி சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மூன்றாவது அணி குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் ’கமல்ஹாசன் கூறும் மூன்றாவது அணி குறித்து தற்போது ஏதும் கூற முடியாது. தேர்தல் நேரத்தில்தான் அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே மூன்றாவது அணியில் தேமுதிகவும் இணைய வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது

From around the web