மூன்று மாதக் கட்டணத்தை தள்ளுபடி செய்த பள்ளி முதல்வர்: பரபரப்பு தகவல்

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் ஒரு சில மணி நேரம் மட்டும் வகுப்புகளை எடுத்துவிட்டு பெற்றோர்களிடமிருந்து அராஜகமாக பள்ளி கட்டணங்களை வசூலித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன இதுகுறித்து மாநில அரசுகளும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு எச்சரித்து உள்ளனர் என்பதும் வலுக்கட்டாயமாக பள்ளி கட்டணத்தை கட்டச் சொல்லும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுm எச்சரிக்கை செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரில்
 
மூன்று மாதக் கட்டணத்தை தள்ளுபடி செய்த பள்ளி முதல்வர்: பரபரப்பு தகவல்

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் ஒரு சில மணி நேரம் மட்டும் வகுப்புகளை எடுத்துவிட்டு பெற்றோர்களிடமிருந்து அராஜகமாக பள்ளி கட்டணங்களை வசூலித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன

இதுகுறித்து மாநில அரசுகளும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு எச்சரித்து உள்ளனர் என்பதும் வலுக்கட்டாயமாக பள்ளி கட்டணத்தை கட்டச் சொல்லும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுm எச்சரிக்கை செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்று மாதங்களுக்கு பள்ளிக்கட்டணங்களை தள்ளுபடி செய்துள்ளதாக அப்பள்ளியின் முதல்வர் அறிவித்துள்ளார்

இதுகுறித்து அந்த பள்ளியின் முதல்வர் மம்தா மிஸ்ரா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ’சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். எல்லா பெற்றோர்களும் பணத்தை செலுத்த முடியாது என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஏப்ரல், மே, மற்றும் ஜூன் மாத கட்டணங்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்

பள்ளி முதல்வரின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோல மற்ற பள்ளிகளும் மூன்று மாதக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன

From around the web