என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கத் தயார்,மன்னிப்பு கேட்க முடியாது: பிரசாந்த் பூஷன் திட்டவட்டம்

நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக பிரசாந்த் பூஷன் என்ற மூத்த வழக்கறிஞர் மீது தானாகவே முன்வந்து சுப்ரீம் கோர்ட்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகும் அவரது தண்டனை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் பிரசாந்த் பூஷண் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ’நான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அதற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயார் என்றும் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
 

என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கத் தயார்,மன்னிப்பு கேட்க முடியாது: பிரசாந்த் பூஷன் திட்டவட்டம்

நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக பிரசாந்த் பூஷன் என்ற மூத்த வழக்கறிஞர் மீது தானாகவே முன்வந்து சுப்ரீம் கோர்ட்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகும் அவரது தண்டனை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் பிரசாந்த் பூஷண் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ’நான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் அதற்காக என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயார் என்றும் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் ’நான் எனது நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக இருக்கிறேன் என்றும், அதில் நான் பின்வாங்க போவதில்லை என்றும், தண்டனைகளுக்கும் தயாராகத்தான் இருக்கிறேன் என்றும் மன்னிப்பும் கேட்க போவதில்லை எனவும் பிரசாந்த் பூஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஜனநாயகத்தின் அடிப்படை ஆதாரத்தை காப்பாற்ற விமர்சனங்கள் என்பது அடிப்படை கடமை என்றும், நான் எனது அடிப்படை கடமையை செய்ததாகவே கருதுகிறேன் என்றும், எனது தண்டனைக்கு எதிரான வாதமாக உண்மையை மட்டும் நான் கருதுகிறேன் என்றும் அவரது தரப்பில் இன்று நீதிமன்றத்தில் வாதாட்டப்பட்டது என்பது குறிப்ப்பிடத்தக்கது

முன்னதாக பிரசாந்த் பூஷனுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டாலும், அவரது சீராய்வு மனு மீதான விசாரணைக்கு பிறகே தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web