இந்த கண்துடைப்பு திட்டங்களால் வறுமையே மிஞ்சும்- சசி தரூர்

2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். இதில் பலவகையான முக்கிய அம்சங்களைக் கொண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், பரபரப்பாக மக்களால் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் வரை அனைவராலும் பேசப்படும் திட்டம் பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு மாதத்திற்கு ரூ.500 வழங்கும் திட்டம்தான். இது ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும், இது சர்ச்சையை கிளப்பிய திட்டமாகவே உள்ளது, பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களுக்கு இந்தத்திட்டம்
 
இந்த கண்துடைப்பு திட்டங்களால் வறுமையே மிஞ்சும்- சசி தரூர்

2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். இதில் பலவகையான முக்கிய அம்சங்களைக் கொண்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், பரபரப்பாக மக்களால் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் வரை அனைவராலும் பேசப்படும் திட்டம் பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு மாதத்திற்கு ரூ.500 வழங்கும் திட்டம்தான்.

இது ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும், இது சர்ச்சையை கிளப்பிய திட்டமாகவே உள்ளது, பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களுக்கு இந்தத்திட்டம் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே இருக்கும் என்றும், இதனைக் கொண்டு எப்படி ஒரு நபர் குடும்பத்தை ஓட்டுவது என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த கண்துடைப்பு திட்டங்களால் வறுமையே மிஞ்சும்-  சசி தரூர்

விவசாயிகளுக்கு மாதம் ரூ. 500 வழங்கினால், அதை வைத்து அவர்களின் அன்றாடத் தேவையினைப் பூர்த்தி செய்ய முடியுமா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் மட்டுமே மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் உள்ளது. 

ஆனால் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கப்படும் என்னும் திட்டம், பசியால் வாடுபவர்களுக்கு பயனளிக்குமா என்று கருத்தில் கொள்ளவேண்டும், இன்றைய விலைவாசியில் இந்தத் திட்டம்  ஒரு கண்துடைப்பாகவே இருக்கும் என்றார்.

குறைந்தபட்ச ஆதாரவிலையில் இன்னும் மாற்றங்கள் செய்திருக்கலாம் மேலும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருந்தால், அவர்களின் நிலையில் ஏதாவது மாற்றத்தைக் காண இயலும், இந்த 500 ரூபாயைக் கொண்டு அந்த கடனுக்கு வட்டியைக் கூட கட்டமுடியாது என்று தெரிவித்துள்ளார்;

விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணித்து செய்யப்படும் இந்த கண்துடைப்புத் திட்டங்களால் மக்கள் வாழ்வில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என் கின்றார் சசி தரூர். 

From around the web