கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப்-1 தேர்வு தேதி அறிவிப்பு

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள நீட், ஜெ.ஈ.ஈ, உள்பட  பல தேர்வுகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது 

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 தேர்வு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் ஜனவரி மூன்றாம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  எனவே குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த தேர்வுக்கு தயாராகும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்

மேலும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நவம்பர் 2 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  ஏற்கனவே குரூப் 4 தேர்வு கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் இன்று காலை வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web