170 தொகுதிகளில் வெல்லும் ஆட்சியை பிடிக்கும் கருத்துக் கணிப்புகள்!

தமிழகத்தில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகிறது!
 
170 தொகுதிகளில் வெல்லும் ஆட்சியை பிடிக்கும் கருத்துக் கணிப்புகள்!

தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து நடைபெற்று முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி எண்ணப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காக முன்னேற்பாடுகள் மிகவும் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகம் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தல் அசாம் கேரளா மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியிலும் நடைபெற்றுள்ளது.  தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.234 தொகுதிகளிலும் திமுக, அதிமுக ,பாஜக, பாமக போன்ற கட்சிகள் கூட்டணியுடன் களம் இறங்கி இருந்தன.dmk

 தமிழகத்தில் வாக்கு எண்ணப்படும் தேதி இன்னும் 3 நாட்களே உள்ளதால் அதற்காக தற்போது கருத்துக்கணிப்புகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு திமுகவுக்கு சாதகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 170 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளது. மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள அதிமுக கூட்டணி ஆனது 58 முதல் 68 தொகுதிகளில் வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியிருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆனது 4 முதல் 6 தொகுதிகளில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் உலக நாயகன் கமலஹாசனின் கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியானது இரண்டு தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது. இதனால் தமிழகத்தில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகளின் முடிவில் தெரியவந்துள்ளது.மேலும் தமிழகத்தில் திமுக கூட்டணியில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சிக்கு 13 முதல் 17 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் கருத்து கணிப்பு கூறுகிறது.

From around the web