தமிழகம், புதுச்சேரி மற்றும் சென்னையில் வாக்குப்பதிவு நிலவரம்!

மதியம் ஒரு மணிவரை தமிழகத்தில் 39.6 1 சதவீதம் வாக்குப்பதிவு!
 
தமிழகம், புதுச்சேரி மற்றும் சென்னையில் வாக்குப்பதிவு நிலவரம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்றைய தினம் காலையில் தொடங்கியது. அதற்காக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு மிகவும் தீவிரமாக பதிவாகி வருகிறது.தமிழகத்தில்  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் வாக்காளர்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்களது வாக்கினை பதிவிட்டு வருகின்றனர். மேலும் வாக்கு பதிவு செய்ய வரும் வாக்காளர்களுக்கு முக கவசம், சானிடைசர், கையுறை கொடுக்கப்பட்டு வருகிறது.

vote

மேலும்  அவர்கள் இடைவெளி விட்டும் வாக்கு பதிவினை செய்து வருகின்றனர்.  சட்டமன்ற தேர்தல் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரியில் இன்று நடைபெறுகிறது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இந்த 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதலே தொடங்கியுள்ளது. மேலும் இந்த வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளதாகவும் முன்னதாக தகவல் வெளியானது.

அதன்படி தற்போது மதியம் ஒரு மணிவரை 39.61 சதவீதம் வாக்குப்பதிவு உள்ளது. மேலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மதியம் ஒரு மணிவரை 37.16 சதவீதம் பதிவாகியுள்ளதாகவும்,  அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் மதியம் ஒரு மணிவரை 53.80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

From around the web