நாமக்கல் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் கருத்து கணிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நாமக்கல் திருச்செங்கோடு போன்ற தொகுதிகளில் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது!
 
நாமக்கல் மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் கருத்து கணிப்பு!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாம் தேதி வாக்குப்பதிவுகள் காண வாக்குகள் எண்ணப்பட்ட உள்ள நிலையில் அதற்கான கருத்துக்கணிப்புகள் தற்போது மிகவும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அதன்படி தமிழகத்தில் இந்த முறை பெரும்பான்மையை பிடித்து ஆட்சிக்கு திமுக வரவுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சியை மீண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.admk dmk

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் முட்டை உற்பத்தி பேர்போன நாமக்கல் மாவட்டத்தில் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 தொகுதிகள் உள்ளன. அதன்படி ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் இதில் ராசிபுரம் தொகுதியில் அதிமுக மீண்டும் ஆட்சி பெறும் என்று கூறப்படுகிறது. சேந்தமங்கலத்தில் திமுகவின் வெற்றிக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நாமக்கல் தொகுதியில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது. திருச்செங்கோடு தொகுதியிலும் திமுக வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் குமாரபாளையத்தில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாமக்கல் மாவட்ட தொகுதியில் 2 தொகுதியில் அதிமுகவிற்கும் 3 தொகுதியில் திமுகவிற்கும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாமக்கல் தொகுதி மட்டும் கடும் போட்டி நிலவுவதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

From around the web