வேலூரில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம்!

பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு, வரும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 9ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்களாக களமிறங்கிய அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர். நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வரவுள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி இன்று
 

பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கு, வரும் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 9ஆம் தேதி நடத்தப்பட்டு  முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 


இந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்களாக களமிறங்கிய அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர். நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வரவுள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

வேலூரில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம்!


 

அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியிலும், மாலை 6 மணிக்கு வேலூர் சட்டமன்ற தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

 

இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு குடியாத்த சட்டமன்ற தொகுதியிலும், வேலூர் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். 


இந்தப் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களான கே.எஸ்.அழகிரி, வைகோ, காதர் மொய்தீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, முத்தரசன் உள்ளிட்டோரும் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர். 

From around the web