தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

 

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வரும் 31-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி 43,056 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 

polio drops1

ஆனால் அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை தவிர்க்கலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகிய குழந்தைகள், கொரோனாவால் பாதிக்கப்படாத குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம் என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 

தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து முகாம்களை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது

From around the web