பிரச்சாரம் செய்ய அனுமதி பெறுவதற்கு லஞ்சம் கேட்ட காவலர் சஸ்பெண்ட்!

பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட சுயச்சை வேட்பாளரிடம் லஞ்சம் வாங்கிய காவலர் குணசேகரன் சஸ்பெண்ட்!

 
பிரச்சாரம் செய்ய அனுமதி பெறுவதற்கு லஞ்சம் கேட்ட காவலர் சஸ்பெண்ட்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் பல தொகுதிகளில் வேட்பாளர் பலரும் தங்களது வேட்பாளர் குறிப்பாக சுயேச்சை வேட்பாளர் பலரும் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிகமாக தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

police

மேலும் திமுக சார்பில்  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் முதன்முறையாக களமிறங்கியுள்ளார் நடிகரும் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். அவர் தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக கிருஷ்ணதாஸ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

 இந்நிலையில் தற்போது அத்தொகுதியில் பரப்புரை மேற்கொள்ள போலீசாரிடம் அனுமதி பெற சென்று இருந்தார். அப்போது சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய தலைமைக் காவலர் குணசேகரன் பிரச்சாரம் வழங்க அனுமதி தருவதற்கு லஞ்சம் கேட்டார். இதைத்தொடர்ந்து லஞ்சம் வாங்கிய காவலர் குணசேகரன் தற்போது சஸ்பெண்ட் செய்யப் பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காவலர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

From around the web