காவல் நிலைய போலீசார் 74 ஆயிரத்து 162 பேர் வாக்குபதிவு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்!

சிறப்புக் காவலர்  ஊர்காவல்படை போன்ற பல பாதுகாப்பு பணிகளுடன் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது!
 
காவல் நிலைய போலீசார் 74 ஆயிரத்து 162 பேர் வாக்குபதிவு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்!

நாளைய தினம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டுசெல்லப்படுகிறது. தமிழகத்தில் 6.29 வாக்காளர்கள் தகுதி பெற்றதாகவும் தகவல்கள் உள்ளது. மேலும் தமிழகத்தில் வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் மிகவும் பதட்டமான பகுதிகள் என வாக்கு சாவடிகள் உள்ளன.

police

மேலும் அவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளை பாதுகாப்பு பணியில் போலீசார் பலர் ஈடுபட உள்ளனர். அதன்படி காவல் நிலைய போலீசார் 74162 பேர் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்பாடு செய்துள்ளது. மேலும் 8010 சிறப்பு காவல் படை போலீசாரும், 232 துணை ராணுவப்படை வீரர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் ஊர்காவல் படை வீரர்கள் 14962 பேரும் ,தீயணைப்பு வீரர்கள் 375 பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 31 சிறைக் காவலர்களும் 199 வன பாதுகாவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் இவர்கள் மட்டுமின்றி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் 15197 வரும் ஓய்வு பெற்ற காவலர்கள் 2203 பேரும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து 6350 பேரும் வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

From around the web