இரவு நேர  ஊரடங்கு மீறினால் வாகனங்கள் பறிமுதல் காவல்  ஆணையர் அதிரடி!

சென்னையில் இரவு நேர ஊரடங்கு மீறுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ் குமார் கூறியுள்ளார்!
 
இரவு நேர ஊரடங்கு மீறினால் வாகனங்கள் பறிமுதல் காவல் ஆணையர் அதிரடி!

இந்தியாவில் கடந்த ஆண்டு ஆரம்பம் முதல் கடந்த ஆண்டின் இறுதி வரையிலும் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. காரணம் என்னவெனில் இந்தியாவில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனா கண்டறியப்பட்டது. இதனால் இந்திய அரசானது நாடெங்கும் முழு ஊரடங்கு திட்டத்தினை நடைமுறையில் கொண்டு வந்தது. மேலும் இந்த  ஊரடங்கு போது பல்வேறு நபர்கள் மீறுபவர்களின் மீதும் வழக்குகள் பதியப்பட்டன. இந்நிலையில் இந்தியாவின் பெரும் முயற்சியினால் கடந்த ஆண்டின் இறுதியில் இந்த நோயானது கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால் தற்போது இந்த கொரோனா நோயானது மீண்டும் எழுந்து கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

chennai

குறிப்பாக டெல்லி மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு  ஜார்க்கண்டில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு போடப்பட்டுள்ளன. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகளும் அமல்படுத்த உள்ளன. அதனை தொடர்ந்து இன்றைய தினம் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் போக்குவரத்து களும் தங்களது பயண நேரத்தை மாற்றி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னையில் காவல் ஆணையராக இருக்கிறார் மகேஷ்குமார். அவர் தற்போது சில அதிரடி உத்தரவுகளை கூறியுள்ளார் அதன்படி ஊரடங்கு  மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இரவு நேர ஊரடங்கு தேவையின்றி வெளியே  வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் மகேஷ்குமார் கூறியுள்ளார்.

 தலைநகர் சென்னையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்றும் ஆணையர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் இரவு நேர ஊரடங்கு மேம்பாலங்கள் மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் விமான நிலையம் ரயில் நிலையங்கள் செல்வோர் பயணச்சீட்டை  காண்பித்துவிட்டு செல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web