சென்னைக்கு வந்த வெங்காய வேனில் இருந்தது என்ன? அதிர்ச்சியில் காவல்துறையினர்

சென்னைக்கு ஆந்திராவிலிருந்து வெங்காயம் ஏற்றிவந்த வேன் ஒன்றில் 400 கிலோ கஞ்சா இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் ஆந்திராவில் அளவில் இருந்து சென்னைக்கு போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து ஆந்திராவில் இருந்து வரும் லாரிகள், வேன்கள் அனைத்தும் சோதனைச் சாவடியில் சோதனை செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் காவல் ஆய்வாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வெங்காயம் ஏற்றிவந்த
 

சென்னைக்கு வந்த வெங்காய வேனில் இருந்தது என்ன? அதிர்ச்சியில் காவல்துறையினர்

சென்னைக்கு ஆந்திராவிலிருந்து வெங்காயம் ஏற்றிவந்த வேன் ஒன்றில் 400 கிலோ கஞ்சா இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்

ஆந்திராவில் அளவில் இருந்து சென்னைக்கு போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து ஆந்திராவில் இருந்து வரும் லாரிகள், வேன்கள் அனைத்தும் சோதனைச் சாவடியில் சோதனை செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றில் காவல் ஆய்வாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வெங்காயம் ஏற்றிவந்த வேன் ஒன்று சந்தேகத்துக்கு இடமாக இருந்தது

இந்த வேனை முழு அளவில் காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் 400 கிலோ கஞ்சா இருந்ததை கண்டறிந்து காவல் துறையினரே அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து வேன் ஓட்டுநர் மற்றும் வேனின் பின்னால் வந்த காரில் இருந்த இருவர் உள்பட மொத்தம் மூவர் கைது செய்யப்பட்டனர்

மதுரையைச் சேர்ந்த அருண்பாண்டியன், விக்னேஷ் மற்றும் ஓட்டுனர் சென்னையை சேர்ந்த பாபு ஆகிய மூவரும்தான் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

From around the web