ஒரு டீசர்ட் ரூ.9க்கு விற்ற கடைக்கு சீல் வைத்த போலீஸ்: சென்னையில் பரபரப்பு

புதிதாக திறக்கப்படும் கடைகள் விளம்பரத்திற்காக மிக குறைந்த விலையில் அல்லது இலவசமாக பொருட்களை கொடுக்கும் வழக்கம் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட நெல்லையில் திறந்த ஒரு செல்போன் கடையில் ஒரு ரூபாய்க்கு ஹெட்செட் மற்றும் ஒரு சில பொருள்கள் விற்பனை ஆனது. இதனையடுத்து கூட்டம் குவிந்ததால் அந்த கடைக்கு போலீசார் சீல் வைத்தனர் 

இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று புதிதாக ஒரு ஜவுளிக் கடை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக ஒரு டீ சர்ட் வெறும் ஒன்பது ரூபாய் மட்டுமே என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த டீசர்ட்டை வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குவிந்தனர் 

சமூக இடைவெளியை பின்பற்றாமல் டி-ஷர்ட்டை வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்களை குவித்ததாக கடையை சீல் வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் கடை உரிமையாளர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web