டிடிவி தினகரன் மீது விழுப்புரத்தில் போலீசார் வழக்கு பதிவு!

சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நெருங்கிய நிலையில் அதற்காக தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிக மும்முரமாக நடைபெற்று உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதா சாகு. தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

மேலும் தமிழகத்திலும் பல கட்சி கூட்டணி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் போன்றோர் தமிழகத்தின் அனைத்து பகுதிக்கும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பல கட்சி தலைவர்கள் தமிழகம் அனைத்தும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் அமமுக கட்சியானது வருகின்ற சட்டமன்ற தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அழைக்கப்படும் தேமுதிக கூட்டணியில் சந்திக்க உள்ளது. மேலும் அமமுக கழகப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அவர் மார்ச் 23ம் தேதி தேர்தல் பரப்புரையில் முதல்வர் ,துணை முதல்வர் அமைச்சர் சிவி சண்முகம் போன்றோரை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. மேலும் தற்போது அவர் மீது விழுப்புரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.