ஊரடங்கில் கடை திறந்ததால் வியாபாரி எடை இயந்திரத்தைத் தூக்கி வீசிய காவலர்: அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்பி

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலாக ஒரு சில நிமிடங்கள் மட்டும் கடை திறந்து வைத்திருந்த சாத்தான்குளம் என்ற பகுதியை சேர்ந்த தந்தை மகன் ஆகிய இருவரும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்ததாக அவருடைய உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் தற்போது விதிமுறைகளை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி இயந்திரத்தை தூக்கி வீசிய ஆயுதப்படை காவலர் ஒருவர்
 
ஊரடங்கில் கடை திறந்ததால் வியாபாரி எடை இயந்திரத்தைத் தூக்கி வீசிய காவலர்: அதிரடி நடவடிக்கை எடுத்த எஸ்பி

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலாக ஒரு சில நிமிடங்கள் மட்டும் கடை திறந்து வைத்திருந்த சாத்தான்குளம் என்ற பகுதியை சேர்ந்த தந்தை மகன் ஆகிய இருவரும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்ததாக அவருடைய உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தமிழகத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் தற்போது விதிமுறைகளை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி இயந்திரத்தை தூக்கி வீசிய ஆயுதப்படை காவலர் ஒருவர் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் என்ற பகுதியை சேர்ந்த ரகுராமன் என்ற காவலர் ஊரடங்கின்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது விதிகளை மீறி ராஜா என்பவர் கடை திறந்து வைத்து இருந்ததாக தெரிய வந்ததும் அவருடைய கடையில் இருந்த மின்னணு எடை இயந்திரத்தை தூக்கி வீசியுள்ளார்

இது குறித்த வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த திருப்பத்தூர் எஸ்பி, காவலர் ரகுராமனை ஆயுதப்படைக்கு மாற்றி உள்ளார் பின்னர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற எஸ்பி பாதிக்கப்பட்ட கடைக்காரருக்கு புதிய எடைக்கல் மின்னணு இயந்திரத்தை வாங்கி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது காவலர்கள் மனிதத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web